வரி ஏய்ப்பு புகார்!! தனியார் தோல் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு!!

சென்னை, வேலூர், புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை முதல் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி உட்பட உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபல தோல் தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதற் கட்ட விசாரணையில் வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 2 தனியார் தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், பூந்தமல்லி, பெரியமேடு உள்ளிட்ட பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில் சோதனை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், காலணி மற்றும் பேக் உள்ளிட்ட தோல் பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment