Connect with us

கருமுட்டை விற்பனை! 4 மருத்துவமனைகளை மூட அதிரடி உத்தரவு;;

egg

தமிழகம்

கருமுட்டை விற்பனை! 4 மருத்துவமனைகளை மூட அதிரடி உத்தரவு;;

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருப்பு முட்டை விற்பனை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் இடைத்தரகர் மாலதி, சிறுமியின் தாய் மற்றும் ஆண் ஒருவர் என 3 பேர் இந்த விவகாரத்தில் ஈடுப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அதே போல் கருமுட்டை விற்பனை செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த சூழலில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கருமுட்டை விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார்.

இதனிடையே இன்று அறிக்கை தற்போது சமர்பிக்கப்பட்டு இருப்பதாகவும், பின்னர் சுதா மருத்துவமனை ஈரோடு, சுதா மருத்துவமனை சேலம், ராம் பிரசாத் மருத்துவமனை பெருந்துறை, விஜய் மருத்துவ மனை ஓசூர், ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை திருவனந்தபுரம், மத்துருத்துவா டெஸ்டியூப் பேபி செண்டர் திருப்பதி ஆகிய மருத்துவ மனைகள் முறைக்கேட்டில் ஈடுப்பட்டி இருந்தது தெரியவந்ததுள்ளது.

இதனிடையே 4 மருத்துவமனைகளை மூட உத்தரவிட்டு இருப்பதாகவும் இதனால் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளிஅ டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top