செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! “வாரத்தில் இரண்டு நாள் கைத்தறி ஆடைகள் கட்டாயம்”
தற்போது நம் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடைபெறுகிறது.தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான மு க ஸ்டாலின் மேலும் அவர் தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி மக்களிடையே நம்பிக்கையை பெற்று வருகிறார் என்று கூறலாம். அவர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மேலும் அவருடன் சேர்த்து பணியில் செய்ய 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் அந்த துறைகளில் மிகுந்த வல்லுனர்களாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் மேலும் இவன் அரசு ஊழியர்களுக்கான உத்தரவாக காணப்படுகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுரை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் கைத்தறி நெசவு தொழில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
