ஆக்சன் அவதாரம் எடுத்த அண்ணாச்சி : எந்த படத்தில் தெரியுமா?
முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகாவுடன் விளம்பரங்களில் நடித்து புகழ் பெற்றதால் கோடிகளைக் கொட்டி தமிழ் சினிமாவில் ஸ்டைலிஸ் ஸ்டாராக அடியெடுத்து வைத்தவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன்.
அவருக்கு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தமன்னா, ஹன்சிகாவுடன் விளம்பரத்தை எடுத்த ஜேடி, ஜெர்ரி ஆகிய இயக்குனர்களுடன் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது சரவணா ஸ்டோர் புரொடக்ஷன் மூலம் பிரம்மாண்ட பொருட்செலவில் சரவணன் தயாரிப்பில் நாயகனாக நடித்து வந்த படத்திற்கு ‘தி லெஜன்ட்’என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு சவால் விடும் வகையில் சரவணின் ‘தி லெஜன்ட்’முதல் பார்வையில் கையில் குடை ஒன்றை வைத்து கொண்டு ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார் சரவணன்.
யாரோ ஒருவர் முதலீடு செய்யும் பணத்தில் ரசிகர்களிடம் தங்களை ஆக்சன் ஹீரோவாக காட்டிக் கொள்ளும் மத்தியில் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தானே ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள சரவணனின் ‘தி லெஜன்ட்’படம் கோடை கொண்டாட்டமாக திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
