
Tamil Nadu
இனி பிற வாகனங்களில் G, அ எழுத்துக்கள் இருந்தால் நடவடிக்கை..!!
நம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாகனங்களில் army, police, lawyar என்ற பல்வேறு விதமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு காணப்படும். ஒரு சிலர் அரசு ஊழியர்கள் இல்லாமல் அவர்களது உறவினர்களும் அரசுப் பணியை முன்னிட்டு ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை பயன்படுத்துவார்கள்.
இந்த நிலையில் அவ்வாறு வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி, ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. இந்த நிலையில் அரசு வாகனம் இன்றி பிற வாகனங்களில் அரசினை குறிப்பிடும் எழுத்துக்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அந்த வகையில் G அல்லது அ எழுத்துக்களை பயன்படுத்தினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அரசு வாகனங்களில் அ அல்லது G என்ற எழுத்துக்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.
அரசு நிறுவனங்கள், பொதுத்துறை வாகனங்களில் அ, G எழுத்துக்களை பயன்படுத்தினாலும் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.
