Connect with us

யாரையும் இழிவு படுத்தி போஸ்டர், மீம்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!!: நடிகர் விஜய் எச்சரிக்கை;

202107291112345686 Vijay film in 5 languages SECVPF

பொழுதுபோக்கு

யாரையும் இழிவு படுத்தி போஸ்டர், மீம்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!!: நடிகர் விஜய் எச்சரிக்கை;

யாரையும் இழிவு படுத்தி போஸ்டர், மீம்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!!: நடிகர் விஜய் எச்சரிக்கை;

தற்போது தமிழகத்தில் தளபதி என்று அழைக்கப்படுகிறார் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் beast. இந்த திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

இவ்வாறு உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அரசு பதவிகளில் உள்ளவர்களை, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ பதிவிடவும் மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக் கூடாது.

இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கனவே பல முறை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல் இயக்கத்தை விட்டு நீக்கி உள்ளதாகவும் தெரிகிறது.

விஜய் அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்கள் இயக்கத்தை மட்டும் நீக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பெயரில் விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தப் படுவதாக கூறப்படுகிறது..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top