கடந்த மூன்று வருடங்களாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களுள் ஒன்று வலிமை. பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைக்கு வந்த நிலையில் தமிழகம் எங்கும் மாஸ்காட்டி வருகிறது.
இந்த படத்தில் ஹுமா குரோஷி, கார்த்திகேயா, சுமத்திரா உள்பட பலர் நடித்துள்ள நிலையில் எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இன்றளவும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாகி வருகின்றன.
அந்த வகையில் இதுவரை வெளியான அஜித் படங்களில் முதல் நாளிலே 36 கோடியை தாண்டி வசூலை வாரிகுவித்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் பலர் வலிமை படம் மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதனை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் என கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.
இதனை ஏற்ற வலிமை படக்குழுவினர் இப்படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் புதிய வர்ஷன் கொண்ட வலிமை படம் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.