மாணவர்கள் பைக் ஓட்டினால் பள்ளிகள் மூலம் நடவடிக்கை! போக்குவரத்து காவலர்களுக்கு மோர்-சங்கர் ஜிவால்!!

தற்போதுள்ள இளைஞர்களின் கனவாக காணப்படுகிறது பைக் தான். இவை இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கும் பைக் என்பது ஃபேஷனாக காணப்படுகிறது. இதன் காரணமாக பல பள்ளிகளில் மாணவர்கள் பைக் ஓட்டி கொண்டு தான் செல்கிறார்கள்.

இதனை தடுப்பதற்கு இன்று விழிப்புணர்வும் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விழிப்புணர்வை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடத்தியுள்ளார். அதன்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோரை அழைத்து விழிப்புணர்வு நடத்த வேண்டுமென்று சங்கர்லால் கூறியுள்ளார்.

சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதை தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார். சீருடையில் மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பள்ளிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விழிப்புணர்வில் பேசினார்.

அதோடு மட்டுமில்லாமல் கோடை காலம் நெருங்கி உள்ளதால் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலில் நின்று வேலை பார்க்கின்ற கடுமையான சூழல் உருவாகும். இந்த நிலையில் அவர்களுக்கு பணியின்போது மோர் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி கோடையில் போக்குவரத்து போலீசாருக்கு மோர் வழங்கும் பணியை ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து போலீசுக்கு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment