இனிமேல் பஸ்ஸில் புள்ளிங்கோ அட்ராசிட்டி செய்தால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை!

தற்போது உள்ள மாணவர்கள் மத்தியில் கெத்து காட்டுவது, அராஜகம் பண்ணுவது தங்களுக்கே உரித்தான பெருமையாக காணப்படுகிறது. குறிப்பாக அவர்கள் பேருந்தில் படிக்கட்டில் நின்று சாகசம் காட்டி சந்தோஷப்படுவர்.

ஆனால் பல சமயங்களில் இவ்வாறு செய்வது மரணத்திற்கு கொண்டு செல்லும். இதுகுறித்து தற்போது போக்குவரத்து துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

அதன்படி அரசுப் பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பேருந்து ஓட்டுனர், பேருந்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில இடங்களில் பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர் என்று போக்குவரத்து துறை கூறியுள்ளது. போதிய இட வசதி ஏற்படுத்திக் கொடுத்து நின்று பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. பயணிகள் அதிகமாக இருக்கும் போது கூடுதல் பேருந்து இயக்குமாறு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment