எமனாக மாறிய ஆட்டோ… பள்ளி மாணவி மரணம்..!!!

கேரளாவில் சாலையை கடக்க முயன்ற போது பள்ளி மாணவி மீது ஆட்டோ மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அடுத்த தனூர் தெயல பாண்டிமுட்டம் பகுதியில் வசிப்பவர் ஷாபி. இவரது மகள் ஷப்னா ஷெரின் என்பவர் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில் பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீமதி மரணம்! பெற்றோரை விசாரிக்க நேரிடும்.. ஐகோர்ட் எச்சரிக்கை!!

இந்நிலையில் பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்று போது எதிர்திசையில் வந்த சரக்கு ஆட்டோ மாணவி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி திருரங்கடி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு… விசாரணை ஜன.4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

அதன் படி, பள்ளி பேருந்தின் உரிமம் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் உரிமத்தை மோட்டார் வாகனத்துறையினர் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.