Connect with us

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

Tamil Nadu

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

921fbea217be071249e7fbb7ff4d0d10

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் அதற்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் செப்டம்பர் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளி திறப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் முதல் தடுப்பூசி போட்டு விட்டனர் என்பதும் ஒரு சிலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு விட்டனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இருப்பினும் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் அதற்குரிய காரணத்தை கூற வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top