ரஜினி திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் இணையும் சிவராஜ் குமார்!

இந்த நவம்பர் மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இந்த மாதம் 7ஆம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் சிறப்பாக கமல் நடிக்கும் அடுத்தடுத்த படத்தின் அப்டேட்டுகள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நவம்பர் மூன்றாம் தேதி கமல் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி மக்களிடையே ஓர் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட 5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கமல் பிறந்தநாள் அன்று ஏழாம் தேதி கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இணையும் 234 வது திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாக உள்ளது. இந்த வீடியோவிற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன் முடிக்கப்பட்ட நிலையில் இந்த வீடியோ தற்பொழுது கமல் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக தயாராக உள்ளது. கமலின் பிறந்தநாள் அன்று மிகச் சிறப்பான கொண்டாட்டம் காத்திருக்கிறது என கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். நாயகன் திரைப்படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து இணையும் இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இப்படி அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு மத்தியில் நடிகர் கமல் வில்லனாக நடிக்கும் கல்கி திரைப்படத்தின் அப்டேட்டுகளையும் மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் கமலின் 233வது திரைப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

கமலின் 234 வது திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ராணுவத்தின் பின்னணியில் நடக்கும் கதை அம்சத்தை மையமாகக் கொண்டு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தைப் போல இந்த திரைப்படத்திலும் கமலின் ஒன் லைன் ஸ்டோரியை டெவலப் செய்து படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்குப் பின் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார்.

ஹாலிவுட் லெவல் ஆக்சனில் உருவாகும் கமலின் 234வது திரைப்படம்!

சமீபத்தில் கமல் ராணுவ உடையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் ட்ரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்த படம் குறித்த வேறு எந்த அப்டேட்டுகளும் வெளியாகாத நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது இந்த படத்தில் இணைந்த மற்றொரு கதாபாத்திரம் குறித்த தரமான அப்டேட் தற்பொழுது கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவராஜ் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா அல்லது மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா என்பது குறித்த விரிவான விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் நடிகர் சிவராஜ் குமார் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் தீவிர பக்தன் என்பதை பல மேடைகளில் கூறியுள்ளார்.

இப்படி இருக்க ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் கமலுடன் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கும் கமலின் 233 வது திரைப்படம் வேற லெவல் ஹிட் கொடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...