”உங்களோட நடிப்ப இதோட ஸ்டாப் பண்ணிக்கோங்க”……. வார்னிங் கொடுக்கும் நெட்டிசன்கள் !!

ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும்  ஒளிப்பரப்பாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட்.  இந்நிகழ்ச்சி சுமார் இரண்டு மாதங்களை கடந்து பயணம் செய்யும் நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ், தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப்  ஆகியோர் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் தான் கடைசி வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குள் வைக்கப்படுகின்றனர். இருப்பினும் பிக்பாஸ் அல்டிமேட்டில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் சில நாட்களில் நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் போலியாக நடிக்கும் தாமரைப்பற்றி இணையத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் நாடகத்துறையில் நடித்து வந்தார்.

இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையாக இருந்த காரணத்தினால், நாடக துறையில் புகழ் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள் இவரை விஜய் டி.வி- க்கு அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியினை விட்டு வந்ததும் இவருடைய பெயர் மட்டுமில்லாது மார்க்கெட்டும் உயரதொடங்கியது.

இந்த சூழலில் தன்னை  சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்திய நாடக துறையில் புகழ் பெற்ற ராதாகிருஷ்ணன் தற்போது போன் செய்தால் அந்த போன்காலை கட் செய்து விடுகிறாம். நாம் என்ன தான் சற்று உயரத்தை தொட்டுவிட்டாலும் நம்மை உயர்த்தியவரை மறக்கவே கூடாது என்பது பழமொழி.

ஆனால் தாமரை பிக்பாஸ் அல்டிமேட்டில் இருக்கும் அனைவரையும் போலியாக பாசம் காட்டி ரசிகர்களின் வாக்குகளை கவர்ந்து வருகிறார். இந்த தகவலை அறிந்த பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் உங்களோ நடிப்புக்கு அளவே இல்லையா என பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment