Connect with us

எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு. மர்ம நபர்களை தேடும் போலீசார்

Buffalo

செய்திகள்

எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு. மர்ம நபர்களை தேடும் போலீசார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் 40 க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். அதோடு மாடுகள் மூலம் பால் கறந்து பால் வியாபாரமும் செய்து வருகிறார். மேலும், விவசாய நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகளின் மேய்ச்சலுக்கு சென்ற போது மர்ம நபர்கள் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பண்ணையில் மாடுகளை பராமரித்து வந்த போது மாடுகளின் மேல் தோல்கள் எழுந்து பெரிய காயங்களாக மாறியுள்ளது கண்டு ராஜ்குமார் வேதனையில் ஆழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வாயில்லா ஜீவன் மீது கொடூரமாக ஆசிட் வீசிய சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top