குறுவை சாகுபடியில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: முதல்வர் ஸ்டாலின்;

குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகள் பிறகு தமிழ்நாடு சாதனை புரிந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று தஞ்சையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அங்கு பேசிய அவர் 48 ஆண்டுகளுக்கு பிறகு 1.66 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

stalin pti

திமுக ஆட்சிக்கு பிறகு மிகச்சரியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் கூறினார். நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்கினோம் என்றும் உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார், கடந்த பத்தாண்டில் இல்லாதவகையில் சம்பா, தாளடி பயிர் சாகுபடி 3.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

வேளாண் துறையில் புரட்சி ஏற்படுத்திட தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்றுவதே இலக்காக வைத்துள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

நெல் சாகுபடி இலக்கை நோக்கிய பயணத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ளோம் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதை இலக்கு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment