விசாரணை நடந்தபோது திடீரென நீதிபதி மீது கல்வீசிய குற்றவாளி: பெரும் பரபரப்பு!

குஜராத் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே திடீரென குற்றவாளி தான் மறைத்து வைத்திருந்த கல்லை எடுத்து நீதிபதி மீது வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலத்திலுள்ள கீழமை அமர்வு நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மேஷ் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் வழக்கறிஞர்கள் விசாரணை செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த குற்றவாளி கூடுதல் நீதிபதி மீது தான் மறைத்து வைத்திருந்த கல்லை வீசினார்.

ஆனால் நீதிபதி சுதாரித்துக்கொண்டு விலகியதால் கல்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பினார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் தர்மேஷை கட்டுப்படுத்தினர். இதனை அடுத்து கொலை முயற்சி வழக்குடன் மேலும் சில வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.