News
எல்லையில் வீரர்கள் குவிப்பு: இந்தியா-சீனா எல்லையில் பதட்டமா?
இந்திய சீன எல்லையில் திடீரென இந்தியா தனது ராணுவத்தை குவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் கடந்த ஆண்டு மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சீனாவின் முக்கிய செயலிகளை இந்திய அரசு தடை செய்தது என்பதும் வர்த்தரீதியிலும் பல பிளவுகள் வந்தது என்பதும், அதன் பின்னர் அடுக்கடுக்காக சீனா மீதான நடவடிக்கையை இந்தியா எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திடீரென இந்தியா மற்றும் சீனா எல்லையில் இந்தியா தனது படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் வீரர்களோடு தற்போது கூடுதலாக 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் படைக்குவிப்புக்கு சீனா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
