சொத்துக்குவிப்பு வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் அதிமுகவின் முக்கிய புள்ளிகள்!!!

தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக காணப்படுகிறது அதிமுக. இந்த அதிமுக தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பத்தாண்டு காலத்தில் அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் மீது சொத்து குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கூட ஒரு சிலர் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

விஜயபாஸ்கர் அதன் வரிசையில் தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சரான சி விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார்.

அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அங்கு அதிமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். தொடர்ச்சியாகவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்குகிறது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment