ஜோதிடப்படி கொரோனா எப்போது குறையும்

58958876d71994135c4e08cd338b7eeb

கடந்த வருடத்தில் இருந்து கொரோனா நோயின் தொந்தரவால் மிகுந்த மன அழுத்தத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். அதுவும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வடமாநிலங்கள் ஆரம்பத்தில் பாதிப்படைந்த நிலையில் தற்போது தென் மாநிலங்களையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை தினம் தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஜோதிடத்தின் மீது ஆர்வம் இல்லாதவர்களும் லேசாக அப்படியே ஜோதிட ரீதியாக என்ன சொல்கிறார்கள் என ஆர்வத்தில் அப்படியே பல யூ டியூப் சேனல்களின் ஜோதிடப்பகுதிக்கு சென்று பார்ப்பார்கள்.

ஜோதிட ரீதியாக சில ஜோதிடர்கள் சொல்வது என்னவென்றால் 

கடந்த 25.04.2021 முதல்  மாலை 5.43 முதல் செவ்வாய் காற்று ராசியில் இருந்து  ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் சஞ்சாரம் செய்து கொரோனாவை தீவிரப்படுத்தியது. இனி 18.05.2021 மாலை 4.33  முதல் செவ்வாய் ராகுவின் பிடியில் இருந்து விலகி புனர்பூச நட்சத்திரத்தில் இணைவு ஏற்பட உள்ளது.

இதன் மூலம் அடுத்து வரும் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நோய்த்தொற்று குறையலாம். புனர்பூச நட்சத்திரம் குருவினுடைய நட்சத்திரம் கொரோனாவின் வீரியம் குருவின் அருளால் குறையும். இருப்பினும் 21.07.2021 வரையிலும் சிற்சில இடங்களில் இதன் லேசான தாக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும் என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.