
தமிழகம்
பொதுக்குழுவுக்கு வந்த இடத்தில் விபத்து; 13 அதிமுக நிர்வாகிகள் படுகாயம்!!
சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் வரிசையாக வந்து கொண்டு உள்ளனர். ஏனென்றால் இன்று அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தங்களின் படைபலத்தை நிரூபிக்கும் படி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரிசையாக வந்து கொண்டே உள்ளனர். மேலும் இன்று காலை எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் தனது சென்னை இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
இந்த நிலையில் பொதுக்குழுக்காக புறப்பட்ட அதிமுகவினர் தற்போது விபத்தில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் பொதுக்குழுவுக்கு புறப்பட்ட அதிமுகவினர் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சாலையில் சென்ற வேன் மீது கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் திருவண்ணாமலையிலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை வந்த 13 அதிமுகவினர் காயம் அடைந்துள்ளனர். மாற்று பாதையில் புகுந்த ஆம்னி பேருந்து வேன்மீது மோதியதில் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
