சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்ற கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 6 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் லிபசார் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த மாதம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது 30-ஆம் நாள் துக்க நிகழ்வில் பல்வேறு ஊர்களில் இருந்து கலந்து கொண்டனர். அந்த வகையில் 11 பேர் ஆத்தூர் புறவழி சாலையாக சென்றனர்.
அப்போது சேலத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று இருந்த ஆம்னி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதோடு தனுஷ்கா ஸ்ரீ என்ற சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்ததை அடுத்து தப்பியோடிய ஆம்னி பேருந்து ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.