Connect with us

பாதாள சாக்கடையில் பள்ளத்தில் விழுந்த விபத்து!! பொன்னேரியில் பரபரப்பு!!

Capture 84

தமிழகம்

பாதாள சாக்கடையில் பள்ளத்தில் விழுந்த விபத்து!! பொன்னேரியில் பரபரப்பு!!

தமிழகத்தில் பருவமழை நெருங்கி வருவதால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை  சீர்செய்யும் பணிகள்  தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொன்னேரியில் பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்துள்ளார்.

பின்னர் மழை நீருடன் இளைஞர் தத்தளித்து இருந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவரை மீட்டதையடுத்து, சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஜேசிபி மூலம் இரு சக்கர வாகனமும் சேதமடைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு பொன்னேரி பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top