Connect with us

ராமநாதபுரத்தில் கோர விபத்து: 3 பேர் பலி!!

accident 1

தமிழகம்

ராமநாதபுரத்தில் கோர விபத்து: 3 பேர் பலி!!

தமிழகத்தில் சாலை விபத்து என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது ராமநாதப்புரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுற்றுலா வாகனம் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே இருந்த வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதோடு 10க்கும் மேற்பட்டவர் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top