நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: காயமடைந்தோர் மருத்துமனையில் அனுமதி!

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மொத்தம் ஐந்து அனல் மின் அலகுகள் செயல்பட்டு வருகிறது என்பதும் அவ்வப்போது இங்கே விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .

இந்த தீ விபத்து குறித்து நெய்வேலி அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பாய்லர் வெடித்து 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.