Connect with us

கோர விபத்து: லாரி மோதி கல்லூரி மாணவர் பலி!!!

accident 1

தமிழகம்

கோர விபத்து: லாரி மோதி கல்லூரி மாணவர் பலி!!!

கடந்த சில நாட்களாகவே சாலை விபத்து என்பது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கல்லூரி மாணவர் லாரி மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் முகமது சதக்கத்துல்லா (வயது 18). இவர் புதுக்கல்லூரியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை டுத்த எழும்பூர் பகுதியில் காந்தி தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது இருச்சக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முகமது சதக்கத்துல்லா இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top