கோர விபத்து! காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி!!

தூத்துக்குடி அருகே காரும் – லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

பதஞ்சலி உட்பட 16 மருந்துகளுக்கு தடை; நேபாள அரசு அதிரடி!!

அந்த வகையில் சம்பகுளம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திருச்செந்தூர் சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது புல்லாவெளி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிவந்த பால்முத்து பிரபு, பாண்டியம்மாள், தேவி உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். அதே போல் படுகாயமடைந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கவுன்சிலர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!!

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.