ஆளுநரின் வாகனத்தில் கல் வீச்சா? அபாண்டமான குற்றச்சாட்டு..!! அரசியலாக பார்க்கிறார்கள்..!
ஆளுநருக்கான பாதுகாப்பில் தமிழக அரசு எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாது என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநருக்கான பாதுகாப்பில் கவனயீர்ப்பில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
அதன்படி ஆளுநரின் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.
ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் ஆளுநரின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத்தலைவர் எண்ணுகிறார்கள் உறுதியாகவே அது நடக்கவே நடக்காது என்றும் கூறினார்.
