கர்நாடகாவில் பல இளம் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட பாஜகவின் மாணவரணியான விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் நிர்வாகியான பிரதீக் கவுடா என்ற நபர் கல்லூரி பெண்களிடம் பேசி பழகி, அவர்களுடைய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்துள்ளான்.
சமூக வலைத்தளங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் கடந்த 18ம் தேதி பிரதீப் கவுடா கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் பல இளம் பெண்களுடன் வீடியோ காலில் பேசி அவர்களுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்ததும், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது.