தேர்தல் முடிவில் முறைகேடு; அதிகாரி மீது நடவடிக்கை…! இல்லையென்றால் கடுமையான பின்விளைவு!!
நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியாக முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆங்காங்கே சலசலப்பு நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.
ஆனால் தேர்தல் பணியில் தேர்தல் அதிகாரி தவறு செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் கட்சி சார்பில் செயல்பட்ட அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குலுக்கல் முறையில் நடந்த தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளது என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரியை மார்ச் 7ஆம் தேதி ஆஜராகும்படி வீடியோ பதிவுகளை பாதுகாக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுகவின் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் பழனி செல்வி வழக்கு தொடுத்திருந்தார்.
