
தமிழகம்
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் மாணவர்கள்: முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நடைப்பெறாத நிலையில் கடந்த மாதம் பொதுத்தேர்வுகள் தொடங்கி அண்மையில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மட்டும் சுமார் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வுகள் எழுதாமல் ஆப்சென்டானதாக தகவல்கள் வெளியாகியது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே இவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து உடனடியாக துணை பொதுத் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் பல்வேறு மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அதன் படி, பொத்தேர்வில் பங்கேற்காக மாணவர்களை கண்டறிந்து ஜீலை மாதம் நடைபெறும் துணைதேர்வில் மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதே போன்று 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு வராத மாணவர்களும் மீண்டும் அழைக்கப்பட்டு அனைவரும் உடனடி தேர்வில் பங்கேற்பதற்கு பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
