தொடர்ச்சியாக இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் வருகின்றனர். ஏனென்றால் கடந்த சில வாரங்களாக உலகமெங்கும் ஒமைக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த ஒமைக்ரான் பாதிப்பு முதலில் தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டது.
இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களுக்கு வரும் வெளிநாட்டு வாசிகளுக்கு பரிசோதனையை மேற்கொண்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்கின்றனர்.
இந்த நிலையில் நம் தமிழகத்தில் வெளிநாடுகளில் வந்த 49 பேரின் வீட்டில் தனிமையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டம் அந்த 149 பேரில் 49 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டம் வந்த 100 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் மீதமுள்ள 49 பேருக்கு அடுத்த வாரம் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.