கருக்கலைப்பு மாத்திரை; பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குணசேகரன் – கஸ்தூரி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கஸ்தூரி மீண்டும் கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 15-ம் தேதி ஆவட்டி பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக ரத்தப்போக்கு அதிகமானதாக தெரிகிறது. நேற்றைய தினத்தில் மருத்துவ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

பள்ளியில் ஆசிரியையுடன் உல்லாசம்: சிக்கிய தலைமை ஆசிரியர்.. பின்னணி என்ன?

அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிக ரத்தப்போக்கு இருந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் கவலைக்கிடதாக இருப்பதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மருந்தக உரிமையாளர் சுரேஷ் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் போலி மருத்துவர் என கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பரப்பரப்பு! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் ஆசிட் வீச்சு!!

இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பு ஜாமினில் வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் கவலைக்கிடமான இருப்பது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.