Connect with us

அட்ராசக்க..! “அரிசி” மீதான ஜிஎஸ்டி வரி ரத்து;;

rice

செய்திகள்

அட்ராசக்க..! “அரிசி” மீதான ஜிஎஸ்டி வரி ரத்து;;

வணிக பெயரில் அல்லாமல் பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் அரி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் அரிசி கிலோவுக்கு 3 முதல் 5 ரூபாய் வரையில் உயர்த்தப்படும் அபாயம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி தமிழக அரசு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் அரிசி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு தங்களுடைய எதிர்பை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பாக்கெட்டுகளில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், ரவை, மைதா, தயிர், லஸ்ஸி உள்ளிட்டவைகளின் ஜிஎஸ்டி வரியும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top