ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்களுக்கு இந்த வாரம் யார் நாமினேஷன் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில் பிக் பாஸ் இன்று நாமினேஷன் ப்ராசசஸ் கூறியுள்ளது.
ஆனால் இது ஒரு விதமானதாக காணப்படுகிறது. ஏனென்றால் முதலில் பிக் பாஸ் நாமினேசனிலிருந்து யாரேனும் இரண்டு பேரை காப்பாற்றலாம் என்றும் அதற்கு முன்பு மூன்று விதமான நிறங்களில் கலவை ஒன்றினை குடித்துவிட்டு காரணத்தை சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதன்படி அனைவரும் சதீசை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்பின்பு சுரேஷ் சக்கரவர்த்தியை காப்பாற்ற வேண்டுமென்று பெயரை கூறுகிறார்கள். பின்னர் தாமரை காப்பாற்ற பலரும் சொல்கிறார்கள்.
இவ்வாறு உள்ள நிலையில் இறுதியில் பிக் பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் பெயரை கூறுகிறது. அதில் அபிராமியின் பெயர் இல்லாததால் அபிராமி ஆச்சரியத்தோடு அங்குள்ளவர்களை சுற்றிப் பார்க்கிறார். மீதமுள்ளதை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.