Entertainment
விடைபெற்றனர் அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, பிக் பாஸ் 1 சீசனில் கமல் ஹாசன் இருந்ததைப்போல், மற்ற இரண்டு சீசன்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் மூன்றாவது சீசனில் பேச ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? என்று தெரியவில்லை.
நேற்றைய நிகழ்ச்சியில் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவிரும்பும் செய்தியை வீடியோ மூலமாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனை அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் வீடியோ எடுத்தனர்.

அதன்பின்னர், ஹெஸ்ட்டாக நுழைந்த அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் வெளியே வர சொல்லி அழைத்தார் கமல் ஹாசன். ஷெரின் உணர்ச்சி பொங்க, ஷாக்சிக்கு விடை கொடுத்தார்.
அபிராமி லாஸ்லியா மற்றும் முகினுக்கு பிரியாவிடை சிரித்தவாறே கொடுத்தார். மோகன் வைத்யா இந்தமுறை கவின் மற்றும் சாண்டியை ஒரு வழியாக கட்டிப்பிடித்து விடை கொடுத்தார். போன முறை கட்டிப்பிடித்து விடை கொடுக்கவில்லை என்ற பிரச்சினை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
ஷாக்சி வெளியேறியது கவினுக்கு ஒரே சந்தோஷம், அப்பாடா நம்ம லைஃப்ல எப்படியோ எந்தப் பிரச்சினையுல் இல்ல, காதல் தப்பிச்சுச்சு என்று சொல்லிக் கொண்டார் ஷாக்சிக்கு துரோகம் இழைத்த கவின்.
