Entertainment
ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார் அபிராமி!!
விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மற்ற சீசன்களைவிட அதிக அளவிலான டிஆர்பி ரேட்டையும், அதிக அளவில் ரசிகர்களையும் கொண்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கான பிக் பாஸ் ஹோட்டலுக்கு வனிதா விருந்தினராக வந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை வனிதா மதுமிதாவிடமும், சேரனிடமும் நடந்தவற்றில் உள்ள தவறுகளைக் கூறினார்.

அப்போது ஜெயில் தண்டனையில் இருந்த அபிராமிக்கு உடல்நிலை சரியில்லை என்று, லோஸ்லியா கூற சாண்டி அபிராமியை ஜெயிலை விட்டு வெளியே வருமாறு கூறினார். ஆனால் அபிராமி வரத் தயங்கிவிட்டார்.
அப்போது கஸ்தூரி, இந்த முடிவினை நேற்றே எடுத்திருக்கலாம் என்று கூறி இப்போது அவர் வர யோசிக்கிறார்போல, சிறிது நேரத்திற்குப் பின் வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூற, சாண்டி கஸ்தூரியுடன் சண்டைப் போடத் துவங்கிவிட்டார்.
சேரன் அப்போது பிக் பாஸிடம் அனுமதி கேட்கலாம் என்று கூறி, அனுமதி கேட்டார். அதை தொடர்ந்து அபிராமியை விடுக்குவிக்குமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். அதனால் அபிராமி கஸ்தூரியிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினார்.
