Connect with us

பிக்பாஸில் இருந்து வெளியேறினார் அபிராமி…!

Entertainment

பிக்பாஸில் இருந்து வெளியேறினார் அபிராமி…!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கடந்தவாரம் பிக் பாஸ் வீடா? இல்லை இது சண்டைக் காடா? என்கிற அளவு பிரச்சினைகள் மேலோங்கி இருந்தது.

வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகையை எதிர்நோக்கி பலரும் காத்திருந்தனர். அவர் கவின்- சாண்டியின் செய்கை குறித்து கேள்விகள் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பலருக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

78a09645c04428216681a91e486a0026

பின்னர் லாஸ்லியா- சேரன் உறவு குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்ப, லாஸ்லியா காரணங்களை அடுக்கிக் கொண்டே போனார். அதற்கிடையில் சேரன் யாருடன் இருந்தாலும் அவர் எனது மகளே என்று கூறினார்.

அடுத்ததாக, கற்பூரமாக இருக்கும் ஆண்களைப் பற்றிப் பேசினார் கமல். இறுதியில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பற்றிக் கூறுகையில், கவின் – லோஸ்லியா காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறுதியில் அனைவரும் எதிர்பார்த்தபடி அபிராமி வெளியேற்றப்பட்டார்.

 எலிமினேசன் குறித்து குறிப்பிட்டதும் அபிராமி சிரித்தவாறே வெளியேறினார். இது அவர் எதிர்பார்த்த ஒன்றே ஆகும். அபிராமி அனைவரிடமும் விடை பெற்று சிரித்த முகத்துடனே வெளியேறியது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. வெளியே வந்த அபிராமியிடம் பாட்டு பாடச் சொல்லுமாறு கூறினார். அவரும் பாடலைப் பாடி சிரித்த முகத்துடனே வெளியேறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top