Entertainment
இந்த வாரம்தான் தெரியும் அபிராமியின் ஆட்டம்… கேப்டனான அபிராமி!
பிக் பாஸ் சீசன் 3 முதல் வாரத்திலேயே அதிக ரசிகர்களைக் கொள்ளை கொள்ளும் அளவு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை வாக்குவாதம், சண்டை சச்சரவு என்று பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. டிஆர்பியை நினைத்த்தியவிட எகிற வைக்கிறது போட்டியாளர்களின் சண்டை.
மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதலில் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பிறகு இந்த வாரத்திற்கான கேப்டன்களாக இருக்க தர்ஷன், அபிராமி மற்றும் சாண்டி ஆகியோரை நாமினேட் செய்து விட்டு சென்றார்.

அதனாலேயே இந்த மூவருக்கும் இடையில், தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது. அதன்படி, கன்னெக்ஷன் பாய்ண்ட் மூலம் ஒரே பாயிண்ட்டில் 3 பேரும் இருந்தனர். அதாவது ஒரு கயிற்றின்மூலம் மூவரும் கட்டப்பட்டு இருக்க வேண்டும், கடைசி வரை யார் அந்தக் கயிறை அவிழ்க்கவில்லையோ, அவர்தான் தலைவர் என்ற விதியினை அறிவித்திருந்தார் பிக் பாஸ்.
இதில், ஒருவர் ஒருவராக வெளியேறினர். முதலில் சாண்டி விட்டுக்கொடுத்து வெளியேறினார்.. இதே போன்று தர்ஷனும் விட்டுக்கொடுத்து வெளியேறினார், இறுதியில் அபிராமி கேப்டனாக தேர்வானார். முதல் நடவடிக்கையாக கிளீனிங், குக்கிங், வெசல் வாஷிங் ஆகியவற்றிற்கு அணிகள் பிரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
