ஆயிரத்தில் ஒருவன் 2வில் பாண்டியர்களின் பெருமையை கூற நினைக்கும் செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்து 12 வருடங்களை நெருங்கி விட்டது. கார்த்தி, ஆண்ட்ரியா,ரீமா சென் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் பின்பகுதியில் அந்தக்கால சோழ மன்னர்களின் காலத்தை ஒட்டிய ஒரு பகுதி படமாக்கப்பட்டிருக்கும்.

இந்த சோழ மன்னர் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார்.வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் வெகுஜன ரசிகர்களை இப்படம் கவரவில்லை. சில வருடங்களுக்கு முன் சோழன் பயணம் தொடர வேண்டும் எனவும் இதன் மூலம் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் எதிர்காலத்தில் வரும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்திருந்தார்.

images 2022 10 03T220027.886

சில மாதங்களுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திதின் வேலைகள் 2024ம் ஆண்டில் துவங்கவுள்ளதாக தனுஷின் போஸ்டருடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் கொண்டாட்டத்தில் மகளுடன் வந்த ஐஸ்வர்யா ராய்! வைரல் வீடியோ!

தற்போழுது சோழர்களின் வரலாற்றை கதைக்களமாக வைத்து பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தை போலவே இந்த படமும் சோழர் , பாண்டியர்களை மையமாக வைத்து அமைந்துள்ளது.

முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை , ஆனால் கிடைத்திருந்தால் ஆயிரத்தில் ஒருவன்- 2,3,4 என அடுத்தடுத்து வந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அஜித் குமாரின் துணிவு படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலங்கள்! யாருனு தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment