மதுரை ஆவினில் முறைகேடு – 47 பேர் நீக்கம்!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதே சமயம் கடந்த அதிமுக ஆட்சியில் நடைப்பெற்ற ஊழல்களை கலைந்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவினில் பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 47 பேருக்கு நேரடி பணி நியமனம் வழங்கப்பட்டது.

டேங்கர் லாரி – அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் படுகாயம்!

இதற்கிடையில் அருப்புக்கோட்டை அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 17 பேரை வரவழைத்து சுமார் 17 பேர் உடனடியாக தேர்வுசெய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. அதாவது விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, தகுதியுள்ளோரை நேர்காணலுக்கு அழைக்காதது உட்பட முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரிவான விசாரணையை மதுரை ஆவின் ஆணையர் மேற்கொண்டார்.அதன் அடிப்படையில் 47 பேர் ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்திருப்பது அம்பலமாகி உள்ளது.

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. புலம்பும் TTF வாசன்!

மேலும், இத்தகைய புகாரையடுத்து தேர்வு குழு மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையர் சுப்பையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.