இன்று முதல்! ஆவின் நெய் விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஆவின் பாலின் விலை உயர்ந்த நிலையில் ஆவின் நெய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 9 மாதங்களில் ஆவின் பொருட்களின் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக ஆரஞ்சு நிற பால், தயிர் மற்றும் இனிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன் படி, ஒரு லிட்டர் நெய் ரூ.580-க்கு விற்பனை செய்யப்பட்டதையடுத்து தற்போது ரூ.630 ஆக விற்பனையாகிறது.

அதே போல் 5 லிட்டர் நெய், 350 உயர்ந்து 3,250 ரூபாயாகவும், 200 மி.லி ரூ.130ல் இருந்து 145 ரூபாய், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், நடப்பாண்டில் மட்டும் இரண்டாவது முறையாக ஆவின் நெய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.