பிக்பாஸ் டைட்டிலை வென்றது இவர் தானா? எதிர்பாரததை எதிர்பாருங்கள்!!!…

5c6fd4c2804a949edcf67ea3d27d13df

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஆரி தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்து வருகின்றனர். எதுவாயிருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்  என்பது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிநாதமே. இந்நிலையில் நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களுள் முதலிடத்திற்கு 11.6 கோடி வாக்குகளும், இரண்டாம் இடத்திற்கு 4 கோடி வாக்குகளும், மூன்றாம் இடத்திற்கு 89 லட்சம் வாக்குகளும் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத அளவிற்கு 11.6 கோடி வாக்குகள் பெற்று ஆரி டைட்டிலை ஜெயித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.