Entertainment
ஆடாம ஜெயிச்ச ஆரி, ரம்யா… பாத்து பாத்து பாலாஜிக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்!
இந்த நிலையில் நேற்றும் டாஸ்க் தொடர்ந்தது. இதில் முதல் டாஸ்க்கில் சரியாக விளையாடிய பாலாஜி 2-வது டாஸ்க்கில் ரூல்ஸ்களை பிரேக் செய்து விளையாடி சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டார்.
இது கடைசியில் பாயிண்ட்ஸ் டேபிளில் எதிரொலித்தது. பாட்டு தெரியாமல் சென்று பஸ்ஸரை அழுத்தியதால் அவரின் பாயிண்ட்ஸ்கள் வெகுவாக சரிந்து விட்டன. இரண்டு டாஸ்க்குகளிலும் அதிகம் பங்கு பெறாமல் இருந்த ரம்யா, ஆரி இருவருக்கும் பிக்பாஸ் ரூல்ஸ் அடிப்படையில் பாயிண்ட்ஸ்களை வழங்கினார். இந்த அடிப்படையில் பாலாஜிக்கு சமமாக தற்போது ஆரியும் மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
இதேபோல ரம்யாவும் பாயிண்ட்ஸ் டேபிளில் நல்ல நிலையில் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆடாம ஜெயிச்சிட்டாங்க என இருவரையும் பாராட்டி வருகின்றனர். இன்னும் சில நாட்கள் இந்த டாஸ்க்குகள் இருக்கலாம் என்று தெரிகிறது. கடைசியில் யார் இதில் முதலிடம் பெறுகிறார்கள்? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
