ஓடாமல் போலிசாரிடம் நின்னு அடி வாங்கிய ஆரி… மனதை உருக்கும் சம்பவம்

357dbbbcdf1cf649238689515c3fbe91-1

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவரது நேர்மையும் மனவுறுதியும் தான். 

ஆரம்பத்தில் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று சில வாரங்கள் இருந்தார். ஆனால் அதன் பின்பு போட்டியாளர்கள் செய்த சில குறைகளை தைரியமாக குறிப்பிட்டார். அந்த தருணம் தான் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு அடுக்கடுக்காக அவரது ஒவ்வொரு செயல்களும் பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் ஆரியை பற்றிய பழைய  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆரி ஒரு சமூக ஆர்வலர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இயற்கை விவசாயம் மற்றும் அதை  சார்ந்த பல துறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களோடு இணைந்து அவர் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவருடன் இணைந்து செயலாற்றிய அவரது நண்பர் கூறும்பொழுது “ஆரிக்கு இருக்கும் வலிமையை நான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தான் பார்த்தேன். 

எப்பொழுதும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள மாட்டார். ஆனால் எப்பொழுதும் பின்னின்று மக்கள் அனைவருக்கும் உணவு கிடைத்ததா, மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா என்பது போலவே சிந்தித்துக் கொண்டிருப்பார். அதுவும் சிறிது கூட ஓய்வு இல்லாமல் அவர் உறுதியுடன் இருந்தார். ஒருமுறை போலீஸ் தடியால் அடித்த போதும் பின்வாங்கி ஓடாமல் அதே இடத்தில் நின்று அழுதார்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.