‘ஆடிப்பெருக்கு’… நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கினாலே அடுத்தடுத்து பல கோவில்களில் திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் நடைபெறும். மேலும் நாளைய தினம் ஆடிப்பெருக்கு என்பதால் பல இடங்களில் ஏற்பாடுகள் அதிதீவிரமாக காணப்பட்டு வருகின்றன.

பொதுவாக ஆடிப்பெருக்கு அன்று அம்மன் கோவில்களில் கூழ் காய்ச்சப்படும். இதனால் பல இடங்களில் உள்ளூர் விடுமுறைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும். ஏற்கனவே நம் தமிழகத்தில் தொடர்ந்து உள்ளூர் விடுமுறைகளானது கனமழையின் காரணமாக விடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளைய தினம் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார்.

இதனை ஈடு செய்யும் வகையில் ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment