‘ஆடிப்பெருக்கு விழா’-காவிரி ஆற்றில் குளிக்க தடை.!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;

நாளைய தினம் தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தில் அம்மன் கோவில்களில் கூல் காய்ச்சப்படும். இந்த நிலையில் நாளைய தினம் பல இடங்களில் ஆற்றங்கரைகளில் மக்கள் பல்வேறு விதமான சடங்குகளை செய்வார்கள்.

ஆனால் தற்போது வானிலையோ கடும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment