மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மின்சாரத்துறை தெரிவித்து இருந்தது.
விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையா?- சுகாதார இயக்ககம் விளக்கம்!
இந்நிலையில் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ம் தேதியோடு கால அவகாசம் முடிவடைகிறது. இதற்காக மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
கோகுல்ராஜ் வழக்கு! மயங்கி விழுந்த சுவாதி… நீதிமன்றத்தில் பரபரப்பு!!
இதன் அடிப்படையில் அவ்வாறு புகார் வந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.