மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் பெறுபவர்கள், ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

இதனிடையே வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் வீட்டு நுகர்வோர், குடுசை நுகர்வோர், பொது வழிபாட்டுத்தலங்கள், விவசாய பயன்பாடு மின் இணைப்புகள் மற்றும் கைத்தறி நுகர்வோர்கள் ஆகியோர் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் ஹிஜாப்… உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு..!!!

இதனை தொடர்ந்து தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்களும் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறையானது அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பனி நடைபெற்று வருகிறது.

பால்கனியில் தவறி விழுந்த குழந்தை பலி!!

இந்த சூழலில் மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணையானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment