ஆதார் எண் விவரங்களைக் கேட்கக்கூடாது- ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை உத்தரவு!!

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ ஆதார் அட்டை நகலை வாங்கவோ கூடாது என நியாயவிலை கடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதால் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும், ஆதார் விவரங்களை சேகரிக்க வேண்டும் போன்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.

இபிஎஸ் வழக்கு! அறப்போர் இயக்கம் அவதூறு பேச கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி!!

இத்தகைய சூழலில் உணவு துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டு உள்ளது. அதில் 14,86,582 குடும்ப
அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை எனவும், இதனால் புதிய வங்கி கணக்கு தொடங்கி ஆதார் எண் விவரங்களை அணுப்ப வேண்டும் என உணவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு துறையில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும், நேரடியாக நியாயவிலை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் நகலை சேகரிக்கை கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்! விதி மீறி நம்பர் பிளேட்.. ஐகோர்ட் கிளை உத்தரவு!!

அதே போல் தேசிய வங்கிகள் மூலமாக ஆதார் விவரங்கள் குறித்து இணைக்கப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.