மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கட்டாயமா? – வெளியான புதிய தகவல்!

கடந்த சில தினங்களுக்கு முன் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தகுதி வாய்ந்த மானியம் வழங்குவதற்காகவும், போலியான மின் இணைப்பு கண்டறிவதற்காக இத்தகைய நடைமுறை கட்டாயம் என தமிழக மின்வாரிய அமைப்பு தெரிவித்து இருந்தது.

பீகாரில் பயங்கரம்!! ரயில் எஞ்ஜினை திருடிய மர்ம கும்பல்!!

அதன் படி, வருகின்ற 24 முதல் 30-ம் தேதி வரையில் மின்கட்டணம் செலுத்தக்கூடிய நபர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் எனவும் தவறும் பட்சத்தில் மின்கட்டணம் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் ஆனால் வழக்கம் போல் இணையதளம் வாயிலாகவோ அல்லது செல்போன் மூலமாகவோ வாடிக்கையாளர்கள் மின்கட்டணத்தை வழக்கம்போல் செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கியதாக புகார்! பெண் அதிகாரி கைது!!

இருப்பினும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.